Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரானே குழும நிறுவன வருவாய் 34.5% உயர்வு

ரானே குழும நிறுவன வருவாய் 34.5% உயர்வு

வேளச்சேரியில் உள்ள நிலத்தை விற்பனை செய்ததால், நிறுவனத்துக்கு வரிக்குப் பிறகு ரூ.292.1 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னையை தலைமையிடமாக கொண்டு ரானே குழுமம் இயங்கி வருகிறது. இது இந்தியாவின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தியாளராக இருக்கிறது. இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டு ஒருங்கிணைந்த வருவாய் 34.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,242.3 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வருவாய் ரூ.923.4 கோடியாக இருந்தது. உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கான விற்பனை 31 சதவீதமும், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான விற்பனை 57 சதவீதமும், இந்திய உதிரிபாக சந்தைக்கான விற்பனை 11 சதவீதமும் அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 37.7 சதவீதம் உயர்ந்து ரூ.114.1 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாப விகிதம் 9 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மூலப்பொருள் செலவுகள் அதிகரித்தபோதிலும், செலவுக் கட்டுப்பாடு மற்றும் சாதகமான அந்நியச் செலாவணி மாற்றங்களால் லாப விகிதம் மேம்பட்டுள்ளது.

நிகர லாபம் ரூ.21.5 கோடியிலிருந்து ரூ.326.7 கோடியாக உயர்ந்துள்ளது. வேளச்சேரியில் உள்ள நிலத்தை விற்பனை செய்ததால், நிறுவனத்துக்கு வரிக்குப் பிறகு ரூ.292.1 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் 26.8 சதவீதம் உயர்ந்து ரூ.2,292.9 கோடியாகவும், நிகர லாபம் ரூ.40 கோடியிலிருந்து ரூ.356.8 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், ஃபிரிக்‌ஷன் தொழில் பிரிவை கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நிறைவு செய்துள்ளது. இரண்டாவது காலாண்டில் ரூ.74.8 கோடியை மூலதனச் செலவினமாக மேற்கொண்டுள்ளது. முதல் அரையாண்டில் கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.50 கோடி கூடுதலாக முதலீடு செய்துள்ளது.

புதிய ஆர்டர்களால் இந்த காலாண்டில் ரூ.614 கோடி மதிப்பிலான வாழ்நாள் வருவாய் வாய்ப்பை பெற்றுள்ளது. முந்தைய காலாண்டில் ரூ.2,040 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களைப் பெற்றிருந்தது.

முந்தைய செய்தி
அண்ணன் சீர் திட்டத்துக்கு தமிழக அரசு டெண்டர்
அடுத்த செய்தி
Saregama இந்தியா நிறுவன நிகர லாபம் 46.4% உயர்வு

தொடர்புடைய செய்திகள்